மறுசீரமைப்பு பணிகள் குறித்து ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
Jun 4 2023 5:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஒடிசா ரயில் விபத்து மறுசீரமைப்பு பணிகள் தொடர்பாக ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவை, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டறிந்தார்.
கோரமண்டல் ரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முகாமிட்டு சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில் அவரை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு மறுசீரமைப்பு பணிகள் மற்றும் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார். அப்போது ரயில் பெட்டிகளை அகற்றி தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகள் குறித்து பிரதமரிடம், அஸ்வினி வைஷ்ணவ் விளக்கினார். பணிகளை விரைந்து முடித்து விபத்து நடந்த வழித்தடத்தில் மீண்டும் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க அஸ்வினி வைஷ்ணவிற்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.