பீகாரில் பாலம் இடிந்ததற்கு முதலமைச்சர் நிதிஷ்குமாரும், துணை முதலமைச்சர் தேஜஸ்வியும் பதவி விலகுவார்களா? என பாஜக கேள்வி - 2022-ல் பாலம் இடிந்தபோது பாஜக அமைச்சர் என்ன செய்தார் என ஆர்ஜேடி பதிலடி
Jun 5 2023 10:08AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பீகார் மாநிலம் பாகல்பூரில் கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்த பாலம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக பாஜகவுக்கும் ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கும் இடையே வார்த்தைப் போர் மூண்டுள்ளது. பாலம் இடிந்து விழுந்ததற்க்கு முதலமைச்சர் நிதிஷ் குமாரும், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவும் பதவி விலகுவார்களா என பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கு, பாலத்தின் மோசமான தூண்களைக் கட்டும் போது பாஜகவைச் சேர்ந்த நந்த் கிஷோர், மங்கள் பாண்டே மற்றும் நிதின் நவீன் ஆகியோர் 2017 முதல் 2022 வரை அமைச்சர்களாக இருந்ததாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் பதிலடி கொடுத்துள்ளது. 2022 ஏப்ரல் 30ம் தேதி புயல் காரணமாக இதே பாலத்தின் ஒரு பகுதி விழுந்தபோதும் பாஜகவின் நிதின் நவீன்தான் அமைச்சராக இருந்தார் என்றும் ட்வீட் செய்துள்ளது. இதனிடையே தரமற்ற வகையில் பாலம் கட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.