ஆந்திராவில் சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் தீ பற்றி விபத்து : நீண்ட நேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்
Jun 8 2023 5:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆந்திர மாநிலம் நகரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு நிலவியது. சென்னையை சேர்ந்த தொழிலதிபர் சுந்தர்ராஜ் என்பவர், திருப்பதி கோயிலுக்கு அவரது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். சித்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நோக்கி சென்று கொண்டிருந்த கார் திடீரென தீ பற்றி எரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில், கார் முற்றிலும் தீயில் கருகி சேதமடைந்தது. மேலும், காரில் பயணித்தவர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.