கேரளாவில் சாலையில் குட்டியை ஈன்றெடுத்த யானையின் வீடியோ வைரல் : குட்டியை காப்பதற்காக சாலையை சூழ்ந்த யானை கூட்டம்
Jun 8 2023 5:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரள மாநிலம் கண்ணூரில் சாலையில் யானை ஒன்று குட்டி ஈன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கேரளா மற்றும் தமிழக வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கீழப்பள்ளி அருகே ஆராளம் பண்ணை பகுதியில் சாலையில் யானை, குட்டி ஈன்றதை அவ்வழியே ரோந்து சென்ற வனத்துறையினர் வீடியோ எடுத்துள்ளனர். அப்போது குட்டியை பாதுகாப்பதற்காக யானை கூட்டம் சாலையை சூழ்ந்தன. யானைகள் நடமாட்டம் அதிகரித்ததால், கீழப்பள்ளி - பாலப்புழா சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக தடை செய்யப்பட்டது.