ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய 82 பேரின் சடலங்களை அடையாளம் காணுவதில் சிக்கல் : உறவினர்களின் டிஎன்ஏவுடன் சோதனை செய்யப்பட்டு உடல்களை ஒப்படைக்க முடிவு
Jun 10 2023 11:47AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய 82 பேரின் சடலங்களை அடையாளம் காணுவதில் சிக்கல் நீடிப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2ம் தேதி ஒடிசா மாநிலம் பாஹநகா அருகே நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதி விபத்துக்குள்ளானது. மேலும் அங்கு வந்த பெங்களூரு எக்ஸ்பிரசும் விபத்தில் சிக்கியதில் 275 பேர் உயிரிழந்தனர். இதில் மீட்கப்பட்ட சடலங்கள் புவனேஸ்வர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளள. அதில் 82 உடல்கள் அடையாளம் காணுவதில் சிக்கல் நீடிப்பதாகவும், அவர்களின் உறவினர்கள் டிஎன்ஏ-வுடன் சோதனை செய்யப்பட்டு உடல்களை ஒப்படைக்க கூடிய பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.