புதுச்சேரியில் 5,000 இளைஞர்களுக்கு வேலை அளிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக முதலமைச்சர் ரங்கசாமி தகவல்
Jun 10 2023 1:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி மாநிலத்தில் ஐந்தாயிரம் இளைஞர்களுக்கு வேலை அளிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதிதாக தேர்வான 25வது அணியின் 383 காவலர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி கோரிமேடு காவலர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ரங்கசாமி ஏற்றுக் கொண்டார். இதனை அடுத்து பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டினார். விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, படித்த இளைஞர்களுக்கு உடனடி வேலை வழங்க புதுச்சேரி அரசு உறுதியாக உள்ளது என்று தெரிவித்தார்.