கனடாவில் இருந்து மாணவர்கள் நாடு கடத்தப்படுவதை தடுக்க நாடாளுமன்றக்குழு முடிவு : மனிதாபிமான அடிப்படையில் மாற்று ஏற்பாடு செய்ய வலியுறுத்தல்
Jun 10 2023 1:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கனடாவில் இருந்து 700 இந்திய மாணவர்கள் நாடு கடத்தப்படுவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க நாடாளுமன்றக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மனிதாபிமான அடிப்படையில் மாற்று ஏற்பாடு செய்ய எல்லை சேவை நிறுவனத்திடம் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. கனடாவில் இருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை காப்பாற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கனடாவிற்கு படிக்கச் சென்ற 700 இந்திய மாணவர்கள் போலி ஆவணங்கள் மூலம் சென்றது அந்நாட்டு குடியுரிமை அதிகாரிகளால் கண்டறியப்பட்டது. இந்த விவகாரத்தால் கனடாவில் உள்ள 700 இந்திய மாணவர்கள் நாடு கடத்தப்படும் அபாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.