மணிப்பூர் முதலமைச்சருடன் அசாம் முதலமைச்சர் சந்திப்பு : மணிப்பூர் கலவரம் தொடர்பாக இரு மாநில முதலமைச்சர்கள் ஆலோசனை
Jun 10 2023 2:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மணிப்பூர் கலவரம் தொடர்பாக மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங்கை சந்தித்து அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஆலோசித்தார். மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக மைத்தேயி மற்றும் குகி இன மக்களிடையே கலவரம் ஏற்பட்டது. இதனையடுத்து மணிப்பூர் சென்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா நிலைமையை ஆய்வு செய்தார். மேலும், ஓய்வுப் பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது என்றும், இது தொடர்பான 6 வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்கும் என்றும். மணிப்பூர் ஆளுநர் தலைமையில் முக்கிய பிரமுகர்கள் கொண்ட அமைதிக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமித்ஷா தெரிவித்தார். இந்த நிலையில் இரு மாநில முதல்வர்களின் சந்திப்பு தற்போது நிகழந்துள்ளது.