மகாராஷ்டிராவில் சர்ச்சைக்குள்ளான திப்பு சுல்தான் சிலை இடித்து அகற்றம் : பாஜக மற்றும் இந்து அமைப்பினர் எதிர்ப்பு
Jun 10 2023 3:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகாராஷ்டிரா மாநிலத்தில் சர்ச்சைக்குள்ளான திப்பு சுல்தான் சிலை இடித்து அகற்றப்பட்டது. துலே மாவட்டத்தில், எம்.எல்.ஏ.வான பரூக் ஷாவால், திப்பு சுல்தான் சிலை அமைக்கப்பட்டது. ஆனால், அதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே, பாஜக மற்றும் இந்து அமைப்புகள் அமைப்புகள் இடையே பெரும் மோதல் எழுந்தது. இதனால், பதற்றமான சூழல் ஏற்பட்ட நிலையில், திப்பு சுல்தான் சிலையை அகற்றும் முடிவுக்கு வந்த மாவட்ட நிர்வாகம், நேற்று இரவோடு இரவாக சிலையை இடித்து அகற்றியுள்ளது.