10 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் நீரிழிவு நோயால் பாதிப்பு : 13 கோடி இந்தியர்கள் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் இருப்பதாக தகவல்
Jun 10 2023 4:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வில், 10 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் 13 கோடி இந்தியர்கள் நீரிழிவு நோய்க்கு முந்தையநிலையில் இருப்பதாகவும் ஐசிஎம்ஆர் அறிக்கை தெரிவித்துள்ளது. 20 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட கிராம, நகர்புறங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்களிடம் சோதனை நடத்தப்பட்டதில் இந்த தகவல் தெரிய வந்திருக்கிறது. அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிக தாகம், விவரிக்க முடியாத எடை இழப்பு சோர்வு, அதிகரித்த பசி, காயங்கள் ஆறாமல் இருப்பது போன்றவை நீரிழிவு நோயின் அறிகுறிகளாக கூறப்படுகிறது. நீண்ட கால மற்றும் உடலுக்கு மாற்ற முடியாத தீங்குகளைத் தடுக்க நீரிழிவு நோயை விரைவில் கண்டறிந்து சிகிச்சையளிப்பது அவசியம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.