பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்கள் ஹெலிகாப்டரில் பயணம் : சத்தீஷ்கர் அரசு ஏற்பாடு - 88 மாணவர்கள் ஹெலிகாப்டரில் பயணம்
Jun 10 2023 4:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சத்தீஷ்கர் தலைநகர் ராய்ப்பூரில் பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்கள் ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டனர். 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு சார்பில் ஹெலிகாப்டரில் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த வகையில், பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற பிற்படுத்தப்பட்ட சிறப்பு பழங்குடியின மாணவர்கள் ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டனர். இதில், 88 மாணவர்கள் ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டு அசத்தி உள்ளனர்.