பிபார்ஜாய் புயல் எதிரொலியாக கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை : 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
Jun 10 2023 4:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிபார்ஜாய் புயல் எதிரொலியாக, கேரளா மாநிலத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், பிபார்ஜாய் புயலும் மேற்கு கடற்கரை பகுதிகளை அச்சுறுத்தி உள்ளது. புயல் வலுப்பெற்று வருவதாக கூறியுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், கேரளாவில், 7 முதல் 11 சென்டி மீட்டர் மழை பொழிவு இருக்கும் என கூறியுள்ளது. பத்தனம்திட்ட, ஆழப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளா கடற்கரை பகுதியில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், மீனவர்கள் அரபிக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.