தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு செயல் தலைவர்கள் நியமனம் - சுப்ரியா சுலே மற்றும் பிரபுல் பட்டேலை செயல் தலைவர்களாக நியமித்தார் சரத்பவார்
Jun 10 2023 4:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு இரு செயல் தலைவர்கள் நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் சரத்பவார் அறிவித்துள்ளார். அதன்படி, பிரபுல் பட்டேல் மற்றும் சுப்ரியா சுலே இருவரையும், கட்சியின் செயல் தலைவர்களாக அறிவித்துள்ளார். ஏற்கனவே, கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த எதிர்க்கட்சி தலைவரும், சரத் பவாரின் மருமகனுமான அஜித் பவார், அந்தப் பதவிக்கு பரிந்துரைக்கப்படாதது அக்கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.