விசாரணை முடியும் வரை பஹானாகா ரயில் நிலையத்தில் ரயில்கள் நிற்காது : 3 ரயில்கள் விபத்துக்குள்ளான வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் அறிவிப்பு
Jun 10 2023 4:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விசாரணை முடியும் வரை ஒடிசாவின் பஹானாகா பஜார் ரயில் நிலையத்தில் ரயில்கள் நிற்காது என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்பட 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான வழக்கை சிபிஐ விசாரிக்கத் தொடங்கியுள்ளது. விபத்து நடந்த பஹானாகா பஜார் ரயில் நிலையத்தில் 10 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது. அந்த ரயில் நிலையத்தின் சிக்னல் அமைப்பின் மிக முக்கியமான பகுதிக்கு ஸ்டேஷனில் உள்ள ஊழியர்கள் செல்வதற்கு சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். எனவே விசாரணை முடியும் வரை பஜார் ரயில் நிலையத்தில் ரயில்கள் நிற்காது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பஹானாகா பஜார் ரயில் நிலையம் வழியாக தினசரி 170 ரயில்கள் சென்றாலும், ஏழு பயணிகள் ரயில்கள் மட்டுமே தினமும் ஒரு நிமிடம் நின்று சென்று வந்தன.