குஜ்ராத்தில் முதல் திருமணநாளை கொண்டாடும் தன்னைத்தானே திருமணம் செய்து கொண்ட பெண் : தனித்து வாழும் வீடியோவை மகிழ்ச்சியுடன் வெளியிட்ட க்ஷமா பிந்து
Jun 10 2023 4:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தன்னைத்தானே திருமணம் செய்து கொண்ட க்ஷமா பிந்து தனது முதல் திருமண நாளை கொண்டாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். குஜராத்தைச் சேர்ந்த அவர், கடந்த ஆண்டு தன்னைத்தானே திருமணம் செய்து கொண்டு சலசலப்பை ஏற்படுத்தினார். இந்தநிலையில் தான் திருமணம் செய்துகொண்டு ஓராண்டு நிறைவு பெற்றுள்ளதாகக் கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். தனித்து மகிழ்ச்சியாக வாழும் வாழ்க்கை குறித்து விவரிக்கும் வகையில் அந்த வீடியோ இருக்கிறது. மேலும் நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூரின் புகழ்பெற்ற பெங்காலி கவிதையிலிருந்து எடுக்கப்பட்ட "தனியாக நட" என்ற வாசகத்தையும் அவர் பச்சை குத்திக்கொண்டுள்ளார்.