நிலவின் தென்துருவத்தில் உள்ள லேண்டரை எழுப்பும் முயற்சி ஒத்திவைப்பு : இன்று நடைபெற இருந்த முயற்சி நாளைக்கு மாற்றம்

Sep 22 2023 5:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

நிலவின் தென் துருவத்தில் உள்ள விக்ரம் லேண்டரை எழுப்பும் முயற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை எழுப்பும் முயற்சி தற்போது நடைபெறுவதாக இருந்த நிலையில் இஸ்ரோ ஒத்திவைத்துள்ளது. சில காரணங்களுக்காக விக்ரம் லேண்டரை எழுப்பும் முயற்சி நாளைக்கு ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சூரிய வெளிச்சம் இல்லாததால் 14 நாட்களுக்கு முன்பு லேண்டர் மற்றும் ரோவரை உறக்க நிலைக்கு இஸ்ரோ கொண்டு சென்றது. கடந்த 2ஆம் தேதி அன்று ரோவரும், 4ஆம் தேதி அன்று லேண்டரும் உறக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது. இதனிடையே நிலவில் தற்போது மீண்டும் பகல் பொழுது தொடங்கியுள்ளதால் லேண்டர், ரோவரை இஸ்ரோ எழுப்ப முயற்சித்து வருதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00