காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று நடைபெற்ற தூய்மை இயக்கம் நிகழ்ச்சி : குஜராத்தில் சாலைகளில் உள்ள குப்பைகளை அகற்றினார் மத்திய அமைச்சர் அமித்ஷா
Oct 1 2023 3:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தூய்மை இயக்கத்தின்கீழ் சாலைகளில் இருந்த குப்பைகளை மத்திய அமைச்சர் அமித்ஷா அகற்றினார்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தியடிகளுக்கு தூய்மை இயக்கத்தின் மூலம் அஞ்சலி செலுத்தும் விதமாக தூய்மை பணிகள் மேற்கொள்ள நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சாலைகளில் உள்ள குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தினார்.