உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதிக் கட்சியின் சைக்கிள் சின்னம் யாருக்கு என்பது குறித்து, இந்திய தேர்தல் ஆணையம் வரும் 13-ம் தேதி முடிவு : முலாயம்சிங் மற்றும் உ.பி. முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் ஆகிய இருதரப்பினரையும் நேரில் அழைத்து விசாரணை

Jan 10 2017 9:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
உத்தரபிரதேசத்தில், சமாஜ்வாதி கட்சியின் சைக்கிள் சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது? என்பது குறித்து திரு. முலாயம் சிங் மற்றும் திரு. அகிலேஷ் யாதவ் தரப்பினருடன் வரும் 13-ம் தேதி விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் ஆளும், சமாஜ்வாதி கட்சியில் திரு. முலாயம் சிங் யாதவ் தலைமையில் ஒரு பிரிவினரும், அவரது மகனும் முதலமைச்சருமான திரு. அகிலேஷ் யாதவ் தலைமையில் மற்றொரு பிரிவினரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 11-ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறவிருப்பதால், சமாஜ்வாதி கட்சியின் சைக்கிள் சின்னத்தைப் பெறுவதில் இரு தரப்பினரும் தீவிரமுயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், இந்திய தேர்தல் ஆணையத்தை சில தினங்களுக்கு முன் தனித்தனியே சந்தித்த அவர்கள், கட்சியில் தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதாக கூறி, அதற்கான ஆவணங்களை அளித்தனர்.

இந்த ஆவணங்களை ஆராய்ந்த தேர்தல் ஆணையம், திரு. முலாயம் சிங் யாதவ் தரப்பினரையும், திரு. அகிலேஷ் யாதவ் தரப்பினரையும், வரும் 13-ம் தேதி நேரில் அழைத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2727.00 Rs. 2917.00
மும்பை Rs. 2748.00 Rs. 2910.00
டெல்லி Rs. 2760.00 Rs. 2923.00
கொல்கத்தா Rs. 2760.00 Rs. 2920.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.50 Rs. 39500.00
மும்பை Rs. 39.50 Rs. 39500.00
டெல்லி Rs. 39.50 Rs. 39500.00
கொல்கத்தா Rs. 39.50 Rs. 39500.00