ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சலப்பிரதேச மாநிலங்களில் பனிப்பொழிவால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - சாலைகளில் உறைந்து கிடக்கும் பனிக்கட்டிகளை அகற்றும் பணி தீவிரம்

Jan 11 2017 9:51AM
எழுத்தின் அளவு: அ + அ -
காஷ்மீர், ஹிமாச்சலப்பிரதேச மாநிலங்களில் கடும் உறை பனிப்பொழிவு நீடிப்பதால், இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. சாலைகளில் உறைந்து கிடக்கும் பனிக்கட்டிகளை அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

ஜம்மு-காஷ்மீரில் உறைபனி சீசன் நிலவுவதால், அங்கு நாளுக்குநாள் பனிப்பொழிவு தீவிரமடைந்து வருகிறது. வீடுகள், சாலைகள், மரங்கள் அனைத்தும் பனிப்போர்வையால் போர்த்தப்பட்டதுபோல் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கின்றன. சாலைகளில் 10 அங்குலம் வரை பனிக்கட்டிகள் கொட்டிக்கிடப்பதால், வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ரஜோரி பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் பனிக்கட்டிகளால் சூழப்பட்டுள்ளது. அந்நகரில் இருந்து எல்லைப்பகுதிக்குச் செல்லும் சாலைகளில் பனிக்கட்டிகளை அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஹிமாச்சலப்பிரதேசத்திலும் இதே நிலை நீடிக்கிறது. தலைநகர் சிம்லா உள்ளிட்ட பகுதிகள் கடும் உறைபனியின் பிடியில் சிக்கித் தவிக்கின்றன. இதனால் மக்கள் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். தலைநகர் டெல்லியிலும் பனிப்பொழிவு காரணமாக, விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பொதுமக்கள் தீ மூட்டி குளிர் காய்வதை ஆங்காங்கே காணமுடிகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • ULAGAM MARUPAKKAM

  Sun : 12:30

 • AALAYAMUM AARADHANAYUM

  Sun : 07:30

 • KALLADATHU ULAGALAVU

  Sat : 17:30

 • AZHAIPPOM ARIVOM

  Mon - Fri : 16:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

 • ADUKALAM - Jayaplus

  Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2965.00 Rs. 3171.00
மும்பை Rs. 2987.00 Rs. 3163.00
டெல்லி Rs. 3000.00 Rs. 3177.00
கொல்கத்தா Rs. 3000.00 Rs. 3174.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.20 Rs. 43200.00
மும்பை Rs. 43.20 Rs. 43200.00
டெல்லி Rs. 43.20 Rs. 43200.00
கொல்கத்தா Rs. 43.20 Rs. 43200.00