எல்லைப் பாதுகாப்புப் படையில் மோசமான உணவு வழங்கப்படுவதாக வீரர் தெரிவித்த கருத்தால் பெரும் பரபரப்பு : ரேஷன் பொருட்களை பொதுமக்களிடம் பாதிவிலைக்கு ராணுவ அதிகாரிகள் விற்பனை செய்வதாக எல்லைப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு

Jan 11 2017 2:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
எல்லைப் பாதுகாப்புப் படையில் மோசமான உணவு வழங்கப்படுவதாக வீரர் ஒருவர் தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரேஷன் பொருட்களை பொதுமக்களிடம் பாதிவிலைக்கு ராணுவ அதிகாரிகள் விற்பனை செய்வதாக எல்லைப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு மோசமான உணவு வழங்கப்படுவதாகவும், சில நேரங்களில் வெறும் வயிற்றோடு படுக்கைக்குச் செல்ல நேரிடுவதாகவும், இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பணிபுரியும் வீரர் Tej Bahadur Yadav என்பவரின் பேச்சுகள் அடங்கிய வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்துமாறு மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். இந்தப் புகாரை தெரிவித்த வீரர், Tej Bahadur Yadav ஒரு குடிகாரர் என்றும், பணியின்போது தவறுகள் புரிந்ததற்காக அவர் மீது ஒழுங்கீன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் எல்லைப் பாதுகாப்புப் படை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரரின் குற்றச்சாட்டு எழுப்பிய பரபரப்பு அடங்குவதற்குள், ரேஷன் பொருட்களை எல்லையோர மக்களிடம் பாதிவிலைக்கு ராணுவ வீரர்கள் விற்பனை செய்வதாக மற்றொரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோல், எரிப்பொருட்களையும் சந்தைவிலையைவிட பாதிவிலைக்கு விற்பனை செய்வதாக துணை ராணுவப்படை வீரர்களின் முகாம்களுக்கு அருகில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள Humhama எல்லைப் பாதுகாப்புப் படை தலைமையகத்திற்கு அருகே வசிக்கும் மக்கள் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகளிடமிருந்து பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களோடு பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் ஆகியவற்றையும் குறைந்த விலைக்கு பெற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

இதேபோல் எல்லைப் பாதுகாப்புப் படை அலுவலகத்திற்கு தேவையான நாற்காலி மற்றும் இதர பொருட்கள் வாங்குவதற்கு கூட டெண்டர் முறை கடைபிடிக்கப்படுவதில்லை என்றும், அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவின் பேரில் பொருட்கள் வாங்கப்படுவதாகவும், பொருட்களின் தரமும் கருத்தில் கொள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • ULAGAM MARUPAKKAM

  Sun : 12:30

 • AALAYAMUM AARADHANAYUM

  Sun : 07:30

 • KALLADATHU ULAGALAVU

  Sat : 17:30

 • AZHAIPPOM ARIVOM

  Mon - Fri : 16:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

 • ADUKALAM - Jayaplus

  Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2996.00 Rs. 3204.00
மும்பை Rs. 3017.00 Rs. 3195.00
டெல்லி Rs. 3030.00 Rs. 3209.00
கொல்கத்தா Rs. 3031.00 Rs. 3207.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.80 Rs. 43800.00
மும்பை Rs. 43.80 Rs. 43800.00
டெல்லி Rs. 43.80 Rs. 43800.00
கொல்கத்தா Rs. 43.80 Rs. 43800.00