ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் 54 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்‍கம் - ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்‍க பிரிவு நடவடிக்‍கை

Oct 11 2018 4:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் 54 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்‍களை அமலாக்கப்பிரிவு முடக்‍கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது தொழிலதிபர்கள் இந்திராணி மற்றும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோருக்குச் சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம், அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரிய விதிகளுக்குப் புறம்பாக வெளிநாட்டில் இருந்து நிதி பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பான விசாரணை நடவடிக்கைகளைத் தவிர்க்க கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உதவியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியே வழக்குப் பதிவு செய்தன. அதன் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். பின்னர் 24 நாள்களுக்குப் பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான டெல்லியில் உள்ள வீடு, கொடைக்‍கானலில் உள்ள 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான விவசாய நிலங்கள், ஊட்டியில் உள்ள சுமார் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களா மற்றும் வங்கிகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள 90 லட்சம் ரூபாய் உள்ளிட்டவைகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3040.00 Rs. 3251.00
மும்பை Rs. 3062.00 Rs. 3242.00
டெல்லி Rs. 3075.00 Rs. 3257.00
கொல்கத்தா Rs. 3075.00 Rs. 3254.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.70 Rs. 40700.00
மும்பை Rs. 40.70 Rs. 40700.00
டெல்லி Rs. 40.70 Rs. 40700.00
கொல்கத்தா Rs. 40.70 Rs. 40700.00