அஇஅதிமுக விதிகளை மாற்றியமைத்த விவகாரம் தொடர்பாக அமமுக சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விளக்க மனு தாக்கல் - பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் ஆணையம் கண்காணிப்பாளரை நியமித்து தேர்தல் நடத்த வலியுறுத்தல்
Oct 11 2018 4:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அஇஅதிமுக கட்சி விதிகளை மாற்றியமைத்த விவகாரம் தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விளக்க மனு தாக்கல் செய்யப்பட்டது.
அ.இ.அ.தி.மு.க-வின் விதிமுறைகளை மாற்றி, புதிய பதவிகளை ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். அணியினர் உருவாக்கினர். டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இதுதொடர்பான வழக்கில், ஏற்கனேவ ஓ.பி.எஸ். கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், வழக்கினை தேர்தல் ஆணையம் விசாரித்து, 7 வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.
கடந்த மாதம் 13ம் தேதி நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது கட்சி விதி மாற்றம் தொடர்பாக தேர்தல் ஆணையம் உரிய முடிவெடுக்க வேண்டுமென இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்ந நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கழக பொதுச்செயலாளர் சின்னம்மா சார்பில் அப்போது விளக்க மனு தாக்கல் செய்யப்பட்டது. அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கும், பிற பதவிகளுக்கும் தேர்தல் ஆணையம் கண்காணிப்பாளரை நியமித்து உட்கட்சி தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டுமென இந்த மனுவில் வலியுறுத்தப்பட்டது.