ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மவுனம் காப்பது ஏன்? - காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி - பிரதமர் மோடி ஊழல்வாதி என்றும் விமர்சனம்
Oct 11 2018 5:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் திரு. மோடி மவுனம் காப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ள திரு. ராகுல், பிரதமர் ஒரு ஊழல்வாதி என பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் மத்திய பா.ஜ.க. அரசு மீது காங்கிரஸ் தொடர்ந்து குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறது. இன்று செய்தியாளர்களை சந்தித்த திரு. ராகுல், பிரதமர் திரு. மோடி, நாட்டிற்காக பணியாற்றாமல், சில தொழிலதிபர்களுக்காக பணி செய்து வருவதாகவும், அனில் அம்பானியின் நிறுவனத்துக்காக பாடுபட்டு வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்க வேண்டும் என பிரதமர் திரு. மோடி கூறியதாக, முன்னாள் ஃபிரான்ஸ் அதிபர் தெரிவித்துள்ள நிலையில், ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது தெளிவாகியுள்ளதாகவும் திரு. ராகுல் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்துவதே தீர்வாக இருக்கும் எனத் தெரிவித்த அவர், பிரதமர் ஒரு ஊழல்வாதி என்பதை இளைஞர்களுக்கு தெளிவாக சொல்லிக் கொள்வதாகவும் கூறினார்.