ஜெர்மனிக்கு சர்வாதிகாரி ஹிட்லர் என்ன செய்தாரோ அதையே மோடி இந்தியாவுக்கு செய்ய நினைக்கிறார் : காங்கிரஸ் மூத்தத் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே கடும் விமர்சனம்

Nov 5 2018 5:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
சர்வாதிகாரி அடோல்ஃப் ஹிட்லர் ஜெர்மனிக்கு என்ன செய்தாரோ, அதையே பிரதமர் மோடியும் இந்தியாவுக்கு செய்ய நினைக்கிறார் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்தார்.

மும்பை காங்கிரஸ் கட்சியினர் "அரசியலமைப்பை காப்பாற்றுவோம்" என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில், பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, "ஜனநாயகம் அனைத்து இந்தியருக்கும் சமமானது என்றும், அது குறிப்பிட்ட ஒரு சாதி, மதம் அல்லது சமூகத்தினருக்கு மட்டுமே சார்ந்தது அல்ல என தெரிவித்தார்.

மேலும், கடந்த 4 ஆண்டுகளில், சரியான பாதையில் 4 அடிகளை கூட சரியாக பா.ஜ.க.வால் எடுத்து வைக்கமுடியவில்லை என குற்றம்சாட்டிய அவர், கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்தது என்று கை காட்ட பாஜகவுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று தெரிவித்தார்.

இந்தியாவில் சர்வாதிகாரத்தை கொண்டு வர பாஜக முயற்சிக்கிறது என்றும், அடோல்ஃப் ஹிட்லர் ஜெர்மனிக்கு என்ன செய்தாரோ, அதையே பிரதமர் மோடி இந்தியாவுக்கு செய்ய நினைக்கிறார் என்றும், இந்திய ஜனநாயகம் அபாயத்தில் உள்ளதாகவும், அதை தகர்க்கும் பாஜகவின் முயற்சியை எதிர்த்து போராட வேண்டும் என்றும் மல்லிகார்ஜூன கார்கே குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3019.00 Rs. 3229.00
மும்பை Rs. 3042.00 Rs. 3221.00
டெல்லி Rs. 3054.00 Rs. 3235.00
கொல்கத்தா Rs. 3055.00 Rs. 3232.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.20 Rs. 39200.00
மும்பை Rs. 39.20 Rs. 39200.00
டெல்லி Rs. 39.20 Rs. 39200.00
கொல்கத்தா Rs. 39.20 Rs. 39200.00