குக்‍கர் சின்னம் ஒதுக்‍கக்‍கோரி டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்‍கு - அறிக்‍கை தாக்‍கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Jan 18 2019 6:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளில் நடைபெறும் இடைத் தேர்தல்களில் குக்‍கர் சின்னத்தில் போட்டியிட அனுமதிக்‍குமாறு கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்‍கில், அறிக்‍கை தாக்‍கல் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம், தேர்தலில் போட்டியிட குக்‍கர் சின்னத்தை ஒதுக்‍க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து எடப்பாடி தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்‍கு தொடர்ந்திருந்தனர்.

இந்நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளில் எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தல் அறிவிக்‍கப்படும் சூழல் உள்ளதால், அந்த தொகுதிகளில் போட்டியிட குக்‍கர் சின்னத்தை ஒதுக்‍குமாறு கழக துணைப்பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்‍கு, நீதிபதி திரு.ஏ.எம். கன்வில்கர் தலைமையிலான அமர்வு முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்‍கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில் வழக்‍கறிஞர் ஆஜரானார். கழகத்தின் சார்பில் மூத்த வழக்‍கறிஞர் திரு.கபில்சிபல் ஆஜராகி, குக்‍கர் சின்னம் ஒதுக்‍கக்‍கோரி வாதிட்டார். வாதத்தைக்‍ கேட்ட நீதிபதிகள், இதுகுறித்து அறிக்‍கை தாக்‍கல் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர். வழக்‍கு விசாரணை வரும் 24ம் தேதிக்‍கு ஒத்திவைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3288.00 Rs. 3445.00
மும்பை Rs. 3280.00 Rs. 3457.00
டெல்லி Rs. 3283.00 Rs. 3460.00
கொல்கத்தா Rs. 3284.00 Rs. 3461.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.80 Rs. 40800.00
மும்பை Rs. 40.80 Rs. 40800.00
டெல்லி Rs. 40.80 Rs. 40800.00
கொல்கத்தா Rs. 40.80 Rs. 40800.00