சாரதா சிட்பண்டு மோசடி வழக்கு : கொல்கத்தா காவல் ஆணையர் விசாரணைக்கு ஆஜராக சி.பி.ஐ. சம்மன்

Feb 8 2019 12:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
சாரதா சிட்பண்டு மோசடி வழக்கில், கொல்கத்தா காவல் ஆணையர் விசாரணைக்கு ஆஜராகும்படி சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.

சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா காவல் ஆணையர் திரு.ராஜீவ்குமாரிடம் விசாரணை நடத்தவும், வழக்கு தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களை பெறவும் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக்‍கிழமை அவரது வீட்டுக்குச் சென்றனர்.

அப்போது அவர்கள் உள்ளூர் போலீசாரால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டு காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், சி.பி.ஐ. விசாரணைக்கு ராஜீவ் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், அவரை கைது செய்யக்‍ கூடாது என்றும் என்றும் தெரிவித்தது. இந்நிலையில், சிட்பண்டு மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் விசாரணைக்காக நாளை ஆஜராகும்படி சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3369.00 Rs. 3526.00
மும்பை Rs. 3489.00 Rs. 3311.00
டெல்லி Rs. 3313.00 Rs. 3491.00
கொல்கத்தா Rs. 3313.00 Rs. 3491.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 44.50 Rs. 44500.00
மும்பை Rs. 44.50 Rs. 44500.00
டெல்லி Rs. 44.50 Rs. 44500.00
கொல்கத்தா Rs. 44.50 Rs. 44500.00