கர்நாடகாவில் எம்.எல்.ஏவை விலைக்கு வாங்க எடியூரப்பா நடத்திய பேரம் - முதலமைச்சர் குமாரசாமி வெளியிட்ட பரபரப்பு ஆடியோ மூலம் அம்பலம்

Feb 8 2019 4:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏவின் மகனிடம், கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா பேரம் பேசும் ஆடியோ பதிவுகளை அம்மாநில முதலமைச்சர் திரு.குமாரசாமி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கர்நாடக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன் பத்திரிக்கையாளர்களை சந்தித்த முதலமைச்சர் குமாரசாமி, தங்களது கட்சியின் எம்.எல்.ஏ-க்களை இழுக்க பா.ஜ.க. தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகத் குற்றம் சாட்டினார். இதற்கு ஆதாரமாக, எம்.எல்.ஏ நாகன கவுடாவின் மகனிடம், கர்நாடக பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா தொலைபேசியில் நடத்திய உரையாடலையும் அவர், வெளியிட்டார். இந்த உரையாடலில், 25 லட்சம் ரூபாய் ரொக்கமும், அமைச்சர் பதவியும் தருவதாக பேரம் பேசியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த பேரத்தில், மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றதாக குமாரசாமி குறிப்பிட்டுள்ளார். மேலும், இதுகுறித்து சபாநாயகரிடம் புகார் அளிக்கப்போவதாகவும் தெரிவித்தார். ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள எடியூரப்பா, குமாரசாமி வெளியிட்ட ஆடியோ பதிவுகள் பொய்யானவை என பதிலளித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3369.00 Rs. 3526.00
மும்பை Rs. 3489.00 Rs. 3311.00
டெல்லி Rs. 3313.00 Rs. 3491.00
கொல்கத்தா Rs. 3313.00 Rs. 3491.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 44.50 Rs. 44500.00
மும்பை Rs. 44.50 Rs. 44500.00
டெல்லி Rs. 44.50 Rs. 44500.00
கொல்கத்தா Rs. 44.50 Rs. 44500.00