மக்‍களவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், முன்னாள் பிரதமர் தேவகவுடா, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு - முடிவுகள் வெளியான பின்புதான் கூட்டணி குறித்து பேச்சு என தேவகவுடா அறிவிப்பு

May 22 2019 11:15AM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், எதிர்க்‍கட்சித் தலைவர்களை ஒன்றிணைத்து வரும் சந்திரபாபு நாயுடு, முன்னாள் பிரதமர் தேவகவுடாவையும், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியையும் சந்தித்து பேசினார்.

பெங்களூருவில், மதச்சார்பற்ற ஜனதாதள கட்சித் தலைவர் திரு. தேவகவுடாவையும், அவரது மகனும், கர்நாடக மாநில முதலமைச்சருமான திரு. குமாரசாமியையும், ஆந்திர முதலமைச்சர் திரு. சந்திரபாபு நாயுடு நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்‍குப் பின், செய்தியாளர்களிடம் பேசிய திரு. தேவகவுடா, தேர்தல் முடிவுகள் வெளியான பின்புதான், கூட்டணி குறித்து பேச முடியும் என்றும் தற்போது அது குறித்து எதுவும் பேசவில்லை என்றும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, பிரதமர் பதவிக்‍கு ராகுல்காந்திக்‍கு ஆதரவு அளிப்பதாக மதச்சார்பற்ற ஜனதாதளம் தெரிவித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு அதனை நியாயப்படுத்திய சந்திரபாபு நாயுடு, தேர்தல் முடிவுகளுக்‍குப் பின் அனைத்துக்‍ கட்சித் தலைவர்களும் கூடி முடிவு செய்வார்கள் என தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00