புவி பரப்பை தெளிவாக படம் பிடித்து அனுப்ப உதவும் ரிசாட் 2பி செயற்கைக்கோள் - PSLV -C46 ராக்கெட் மூலம் வெற்றி கரமாக விண்ணில் ஏவப்பட்டது

May 22 2019 11:34AM
எழுத்தின் அளவு: அ + அ -
புவி பரப்பை தெளிவாக படம் பிடித்து அனுப்ப உதவும் ரிசாட் 2பி செயற்கைக்கோளுடன் PSLV -C46 ராக்கெட் இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இஸ்ரோ உருவாக்கிய ரிசாட் 2 செயற்கைக்கோள் 2009 லும், 2012ல் ரிசாட் 1 செயற்கைகோளும் விண்ணில் செலுத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, ரிசாட் 2பி செயற்கைக்கோள் PSLV -C46 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சத்தீஷ்தவன் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து இன்று அதிகாலை 5.27 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அடுத்த 15 நிமிடங்கள் 30 விநாடிகளில் ராக்கெட்டிலிருந்து ரிசாட் 2பி செயற்கைக்கோள் பிரிக்கப்பட்டு, திட்டமிட்டபடி புவியிலிருந்து 557 கிலோ மீட்டர் தொலைவில் தற்காலிக விண்வெளி சுற்றுவட்ட பாதையில் ஏவப்பட்டது. சில நாட்களில் செயற்கைக்கோள் படிப்படியாக நிலைஉயர்த்தப்பட்டு, இறுதிச்சுற்று பாதைக்கு கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன புகைப்பட சாதனம் இணைக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள் புவியை தெளிவாக படம் பிடித்து தரைக்கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும். பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு இஸ்ரோ நிறுவனம் அனுமதி அளித்துள்ளதுதை அடுத்து திறந்தவெளி பார்வையாளர் மாடத்தில் இருந்து மக்கள் ராக்கெட் செலுத்தப்படுவதை நேரில் பார்வையிட்டு இஸ்ரோவின் சாதனையை வியந்து பாராட்டினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00