ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய பயங்கர விபத்து - காரில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாப மரணம்

Jun 7 2019 5:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா அருகே, நின்று கொண்டிருந்த லாரியின் மீது கார் மோதிய பயங்கர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

குண்டூர் மாவட்டம் ருத்ரவரம் என்ற கிராமத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கார் மூலம் திருப்பதிக்கு சென்று கொண்டிருந்தனர். இன்று காலை சுமார் 6 மணியளவில் ரேணிகுண்டா அருகே உள்ள குருவராஜு பள்ளி என்ற பகுதியை நெருங்கியபோது, சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த லாரியின் பின்புறமாக கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 10 பேரில் 5 பேர் அதே இடத்தில் உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து பற்றிய தகவல் அறிந்ததும், ரேணிகுண்டா காவல்துறையினர் விரைந்து சென்று உயிருக்குப் போராடியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே அரியலூர் மாவட்டத்தில் நேற்றிரவு தனியார் சிமெண்ட் ஆலைக்கு சுண்ணாம்பு கல் ஏற்றி சென்ற லாரி, ஒரே நேரத்தில் இரண்டு மோட்டார்சைக்கிள்கள் மீது மோதிய விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். வி.கைகாட்டி என்ற பகுதியில் இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் மீது லாரி பயங்கரமாக மோதியபோது இந்த விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் கல்லூரி மாணவர்களான விக்கி, அஜீத் உள்ளிட்ட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00