பிரபல திரைப்பட நடிகர் கிரிஷ் கர்னாட் மறைவுக்‍கு பிரதமர் மோடி இரங்கல் - 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என கர்நாடக அரசு அறிவிப்பு

Jun 11 2019 12:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரபல நாடக ஆசிரியரும், திரைப்பட நடிகரும், எழுத்தாளருமான கிரிஷ் கர்னாட் மறைவுக்‍கு பிரதமர் திரு. மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவுக்‍கு 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

மஹாராஷ்ட்ர மாநிலத்தில் 1938ம் ஆண்டு பிறந்த திரு. கிரிஷ் கர்னாட், கர்நாடக மாநிலத்தில் தன் கல்லூரி படிப்பை முடித்தார். எழுத்தாளர், நடிகர், இயக்‍குனர், நாடக ஆசிரியர் என பன்முகத் தன்மை கொண்ட அவர், ஞானபீடம், பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் ஆகிய விருதுகளை பெற்றுள்ளார். தமிழில் காதலன், ரட்சகன், செல்லமே, ஹேராம் போன்ற படங்களில் குணச்சித்திர வேடம் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 81 வயதாகும் கிரிஷ் கர்னாட், வயது மூப்பு காரணமாக, இன்று காலை, பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் காலமானார். கர்நாடகாவில் எழுத்தாளர் கெளரி லங்கேஷ் சுட்டுக்‍கொல்லப்பட்ட போது, சமூகவிரோதிகளின் கொலை பட்டியலில் கிரிஷ் கர்னாட் பெயரும் இருந்தது குறிப்பிடத்தக்‍கது.

இதனிடையே, கிரிஷ் கர்னாட்டின் நடிப்பு மற்றும் படைப்பு திறமைகள், காலத்தை கடந்து நிலைக்‍கும் என்றும், அவரது இழப்பு வருத்தம் அளிப்பதாகவும் தனது டிவிட்டர் பக்‍கத்தில் பிரதமர் திரு. மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என கர்நாடக முதலமைச்சர் திரு. குமாரசாமி கூறியுள்ளார். அம்மாநிலத்தில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00