மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் கட்சிக்‍கும், பா.ஜ.க.வுக்‍கும் இடையே உச்சகட்ட மோதல் - பா.ஜ.க. நடத்தும் முழுஅடைப்புப் போராட்டத்தால் ரயில்போக்‍குவரத்து பாதிப்பு

Jun 11 2019 12:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் கட்சிக்‍கும், பா.ஜ.க.வுக்‍கும் இடையே உச்சகட்ட மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், இன்று திடீர் முழு அடைப்பு போராட்டத்திற்கு பாரதிய ஜனதா அழைப்பு விடுத்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில், திரிணாமுல் - பாரதிய ஜனதா கட்சியினரிடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் வடக்கு 24 ஃபர்கானா மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரு கட்சி தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் உயிரிழந்தனர். இதில் திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த ஒருவரின் உடலும், பாரதிய ஜனதா ஆதரவாளர்கள் 3 பேரின் சடலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த படுகொலைகளை தொடர்ந்து மேற்குவங்க அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட, மம்தா அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளது. இதனிடையே, மேற்குவங்கத்தில், 12 மணி நேர முழு அடைப்பு போராட்டத்திற்கு, பாரதிய ஜனதா திடீர் அழைப்பு விடுத்துள்ளது. இதனால் அங்கு ரயில் போக்‍குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3145.00 Rs. 3301.00
மும்பை Rs. 3308.00 Rs. 3130.00
டெல்லி Rs. 3311.00 Rs. 3133.00
கொல்கத்தா Rs. 3312.00 Rs. 3134.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.10 Rs. 41100.00
மும்பை Rs. 41.10 Rs. 41100.00
டெல்லி Rs. 41.10 Rs. 41100.00
கொல்கத்தா Rs. 41.10 Rs. 41100.00