டெல்லியை பாதுகாக்க பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் 5 அடுக்கு பாதுகாப்பு வளையம் - அமெரிக்காவிடம் இருந்து 6 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஏவுகணை எதிர்ப்பு தளவாடங்கள் வாங்க மத்திய அரசு முடிவு

Jun 12 2019 10:24AM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லியை பாதுகாக்க பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் 5 அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக அமெரிக்காவிடம் இருந்து 6 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஏவுகணை எதிர்ப்பு தளவாடங்கள் வாங்கப்பட உள்ளன.

தலைநகர் டெல்லி, எல்லைக்கு அருகில் உள்ளதால் எதிரி நாடுகளின் ஏவுகணைகளால் குறி வைக்கப்படும் சாத்திய கூறுகளை கொண்டுள்ளது. இதனால் டெல்லி மக்களின் பாதுகாப்பையும், முக்கிய சின்னங்களையும் பாதுகாக்க, ஏவுகணை தடுப்பு கவசம் உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. டெல்லியின் பாதுகாப்புக்காக ஏவுகணை தடுப்புக் கவசம் அமைப்பதற்காக அமெரிக்காவிடமிருந்து 6 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஏவுகணை எதிர்ப்பு தடவாளங்கள் வாங்கப்பட உள்ளன. ஏவுகணைத் தடுப்பு பாதுகாப்பு கவசம் 5 அடுக்குகளைக் கொண்டதாக இருக்கும். முதல் அடுக்கு டெல்லியின் புறநகர் பகுதியில் அமையும். இதில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை முறியடிக்கும் அமைப்பு இருக்கும்.

இரண்டாம் அடுக்கு டெல்லியை சுற்றியிருக்கும். மூன்றாம் அடுக்கில் பாரக் ரக ஏவுகணைகள் இருக்கும். பாரக் ஏவுகணைகள் விமானங்கள், கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளை அழிக்கும் வல்லமை கொண்டவை. டெல்லியின் பாதுகாப்பை உறுதி செய்யும் நான்காவது வளையத்தில் ஆகாஷ் ஏவுகணைகள் இடம் பெற்றிருக்கும். நான்கு அடுக்குகளையும் காக்கும் ஐந்தாம் அடுக்கில் நாசாம்ஸ் ரக ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்கள் இடம் பெற்றிருக்கும். இந்த 5 பாதுகாப்பு வளையங்களின் மூலம் டெல்லியை முழுமையாக காப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00