மேற்கு வங்கத்தில் ஆட்சியை கவிழ்க்‍கும் நோக்‍கத்தோடு பா.ஜ.க. தொடர்ந்து வன்முறையை தூண்டிவிடுகிறது - முதலமைச்சர் மம்தா பானர்ஜி பகிரங்க குற்றச்சாட்டு

Jun 12 2019 11:08AM
எழுத்தின் அளவு: அ + அ -
மேற்கு வங்காளத்தில் ஆட்சியை கவிழ்க்க பாரதிய ஜனதா கட்சி சதி​ செய்வதாகவும், இதற்காக வன்முறையை தூண்டிவிடுகிறது எனவும் அம்மாநில முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பின்னரும் வன்முறை குறையவில்லை, மாநில அரசு வன்முறையை கட்டுப்படுத்த தவறிவிட்டது என்றும், சட்டம்-ஒழுங்கை உறுதிசெய்ய வேண்டும் என்று கூறி மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு அறிவுரை அனுப்பியிருந்தது. இதுகுறித்து செய்தியாளகளுக்‍கு விளக்கம் அளித்த அம்மாநில முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி, பா.ஜ.க பல்வேறு சமூக ஊடகங்கள் வாயிலாக பொய்யான செய்திகளை பரப்புவதற்காக கோடிக்கணக்கான ரூபாயை செலவழிக்கிறது என்று கூறினார்.

மத்திய அரசும், பா.ஜ.க. கட்சி தொண்டர்களும்தான் மேற்கு வங்காளத்தில் வன்முறையை தூண்டிவிடுகிறார்கள் என்று குற்றம்சாட்டிய அவர், எந்த மாநிலத்திலும் வன்முறையோ, கலவரமோ நடைபெற்றால் மத்திய அரசுக்கும் அதில் சமமான பொறுப்பு உள்ளது என்றும், எனவே மத்திய அரசு தனது பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது என்றும் கூறினார்.

இந்த மாநிலத்தில் வன்முறையை தூண்டிவிடுவதில் ஒரு திட்டமிட்ட சதி உள்ளது என்று கூறிய அவர், மத்திய அரசுக்‍கு எதிராக பேசுவதால், முடக்குவதற்காகவே இதுபோன்ற சதியில் பா.ஜ.க. ஈடுபடுகிறது என தெரிவித்தார். அதன்மூலம் மாநில அரசையும் நீடிக்கவிடாமல் கவிழ்த்துவிடலாம் என சதி செய்கிறார்கள் என செல்வி மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00