கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் யாரும் நடந்து கொள்ளக்கூடாது - பா.ஜ.கவினருக்கு பிரதமர் மோடி எச்சரிக்‍கை

Jul 2 2019 6:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
பாரதிய ஜனதாவுக்‍கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் யாரும் நடந்து கொள்ளக்கூடாது என கட்சியனருக்‍கு, பிரதமர் திரு. நரேந்திர மோடி எச்சரிக்‍கை விடுத்துள்ளார்.

டெல்லியில் இன்று நடைபெற்ற பாரதிய ஜனதா எம்.பி.க்‍கள் கூட்டத்தில், பிரதமர் திரு. மோடி, உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், பா.ஜ.க. செயல் தலைவர் திரு. ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் திரு.மோடி, பாரதிய ஜனதாவுக்‍கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் யாரும் நடந்து கொள்ளக்கூடாது என எச்சரிக்‍கை விடுத்தார்.

பா.ஜ.க. மூத்த தலைவர் கைலாஷ் விஜய் வர்க்கியாவின் மகனும், மத்தியப்பிரதேச பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுமான ஆகாஷ் விஜய்வர்க்கியா, மாநகராட்சி அதிகாரி ஒருவரை கிரிக்‍கெட் மட்டையால் தாக்‍கியது குறித்து பேசிய பிரதமர் மோடி, சம்பவம் தொடர்பான வீடியோவை பார்த்ததாக தெரிவித்தார்.

இதற்காகவா மக்கள் நமக்‍கு வாக்‍களித்தனர் எனக்‍ கேள்வி எழுப்பிய அவர், இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடுபவர்கள், யாருடைய மகனாக இருந்தாலும், கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று ஆவேசமாக குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3288.00 Rs. 3445.00
மும்பை Rs. 3280.00 Rs. 3457.00
டெல்லி Rs. 3283.00 Rs. 3460.00
கொல்கத்தா Rs. 3284.00 Rs. 3461.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.80 Rs. 40800.00
மும்பை Rs. 40.80 Rs. 40800.00
டெல்லி Rs. 40.80 Rs. 40800.00
கொல்கத்தா Rs. 40.80 Rs. 40800.00