காங்கிரஸ் கட்சியின் இடைக்‍கால தலைவராக மோதிலால் வோரா நியமனம் - ராகுல்காந்தி ராஜினாமா செய்ததையடுத்து உடனடி நடவடிக்‍கை

Jul 4 2019 12:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து திரு. ராகுல்காந்தி ராஜினாமா செய்ததையடுத்து, மோதிலால் வோரா இடைக்‍கால தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்த திரு. ராகுல்காந்தி, அதுகுறித்து அக்‍கட்சி தொண்டர்களுக்‍கு 4 பக்‍க அளவில் விளக்‍கக்‍ கடிதம் எழுதியுள்ளார். அதில், மக்‍களவை தேர்தல் தோல்விக்‍கு முழு பொறுப்பேற்றுக்‍ கொள்வதாகவும், யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை எனவும் தெரிவித்திருந்தார். இதனிடையே, உடனடியாக தலைவரை தேர்ந்தெடுக்‍க அவர் வலியுறுத்தி கடிதம் வெளியிட்ட உடனேயே, காங்கிரஸ் கட்சியின் இடைக்‍கால தலைவராக 91 வயதான திரு. மோதிலால் வோரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பிறந்த திரு. மோதிலால் வோரா, மத்தியபிரதேச மாநில முதலமைச்சராகவும், மத்திய அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது சத்தீஸ்கர் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள மோதிலால் வோரா, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் தொடர்பான நிர்வாகங்களை கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3288.00 Rs. 3445.00
மும்பை Rs. 3280.00 Rs. 3457.00
டெல்லி Rs. 3283.00 Rs. 3460.00
கொல்கத்தா Rs. 3284.00 Rs. 3461.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.80 Rs. 40800.00
மும்பை Rs. 40.80 Rs. 40800.00
டெல்லி Rs. 40.80 Rs. 40800.00
கொல்கத்தா Rs. 40.80 Rs. 40800.00