பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை தொடர்பாகப் பேசிய விவகாரம் - அவதூறு வழக்‍கில் மும்பை நீதிமன்றத்தில் ஆஜரானார் ராகுல் காந்தி

Jul 4 2019 5:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை குறித்து, அவதூறு கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்‍கில், திரு. ராகுல் காந்தி, மும்பை நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்.

கர்நாடக மாநிலம் பெங்ளூருவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளரான கௌரி லங்கேஷ், 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இக்‍கொலை தொடர்பாக, அம்மாநில சிறப்பு புலனாய்வு பிரிவு, விசாரணை நடத்தி வருகிறது.

கௌரி லங்கேஷ் படுகொலை தொடர்பாக கருத்து தெரிவித்த திரு. ராகுல், பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளுக்கு எதிராக பேசுபவர்களின் குரல் நசுக்கப்படுகிறது. அவர்கள் தாக்கப்படுகிறார்கள். துன்புறுத்தப்படுகின்றனர். கொலை செய்யப்படுகின்றனர். மதவாத சக்திகளுக்கு எதிராக போராடியவர் கொல்லப்பட்டுள்ளார். இது போன்ற சம்பவங்களை மீண்டும் நடக்க அனுமதிக்கக்கூடாது என்று கூறினார்.

ராகுல் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்.எஸ்.எஸ்.அமைப்பைச் சேர்ந்த ஹிருத்மான் ஜோஷி என்பவர் மும்பை மெட்ரோ பொலிட்டன் நீதிமன்றத்தில், அவதூறு வழக்கு தொடர்ந்தார். ராகுல் நே​ரில் ஆஜராக, நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதையடுத்து, இன்று நடைபெற்ற வழக்கு விசாரணைக்‍கு, ராகுல் காந்தி, நேரில் ஆஜரானார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3288.00 Rs. 3445.00
மும்பை Rs. 3280.00 Rs. 3457.00
டெல்லி Rs. 3283.00 Rs. 3460.00
கொல்கத்தா Rs. 3284.00 Rs. 3461.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.80 Rs. 40800.00
மும்பை Rs. 40.80 Rs. 40800.00
டெல்லி Rs. 40.80 Rs. 40800.00
கொல்கத்தா Rs. 40.80 Rs. 40800.00