காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தாமதமின்றி தேர்ந்தெடுக்‍க வேண்டும் - ராஜினாமாவை அதிகாரப்பூர்வமாக அறிவித்த ராகுல் காந்தி வலியுறுத்தல்

Jul 4 2019 12:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவரை சற்றும் தாமதிக்‍காமல் உடனடியாகத் தேர்வு செய்யவேண்டும் என திரு. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்ததால், அதற்குப் பொறுப்பேற்று திரு. ராகுல்காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதனை ஏற்க கட்சித் தலைமை மற்றும் தொண்டர்கள் மறுத்த போதிலும் தனது முடிவில் உறுதியாக இருந்த அவர், நேற்று அதிகாரப்பூர்வமாக தனது ராஜினாமா முடிவை அறிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றுவது தனக்‍கு கிடைத்த பெருமை என்றும், தேர்தல் தோல்விக்‍கு முழு பொறுப்பேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். கட்சியை மீண்டும் பழைய நிலைக்‍கு கொண்டுவர கடுமையான முடிவை தான் எடுத்திருப்பதாகவும் கூறியுள்ளார். புதிய தலைவரை விரைந்து தேர்வு செய்யவேண்டும் என்றும், அவரை தான் தேர்வு செய்வது சரியாக இருக்காது என்றும் கூறிய திரு. ராகுல், இந்த விசயத்தில் கட்சித் தலைமை நல்ல முடிவு எடுக்‍கும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி மீது தனக்‍கு வெறுப்போ, கோபமோ இல்லை என்றும், அக்‍கட்சியின் கொள்கைகளை மட்டுமே எதிர்ப்பதாகவும் திரு. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00