காஷ்மீருக்கு எதிர்கட்சி தலைவர்களுடன் வருவதாக தகவல்- ஆளுநர் அழைப்புக்கு ராகுல் காந்தி பதில்

Aug 13 2019 4:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
காஷ்மீரில் அமைதி நிலவுவதாகக் கூறிய ஆளுநர் சத்யபால் மாலிக்குக்கு, எதிர்கட்சி தலைவர்களுடன் வருவதாக ராகுல்காந்தி ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.

காஷ்மீரின் நிலை இயல்பாக இல்லை என்று சில நாட்களுக்கு முன்பு திரு. ராகுல் காந்தி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த காஷ்மீர் ஆளுநர் திரு. சத்ய பால் மாலிக், காஷ்மீரில் நிலை சுமூகமாக உள்ளது என்றும், அதை தாங்கள் நேரில் வந்து உறுதிபடுத்துவதற்கு, தானே சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்து தருவதாகவும் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்துள்ள ராகுல் காந்தி தான் காஷ்மீருக்கு செல்வதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், எதிர்க்கட்சி தலைவர்களுடன் தான் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளை, நேரில் சென்று பார்வையிட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யத் தேவையில்லை எனவும், ஜம்மு-காஷ்மீர் மக்கள், முக்கிய தலைவர்கள் மற்றும் ராணுவ வீரர்களை சந்தித்து பேசுவதற்காக வாய்ப்பை தர வேண்டும் என்றும், தங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் ராகுல் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே காஷ்மீர் சென்ற இடதுசாரிகட்சி தலைவர்களை அம்மாநில காவல்துறை கைதுசெய்து, டெல்லிக்கு திருப்ப அனுப்பியது குரிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00