கேரளாவில் கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 91-ஆக உயர்வு - மலப்புரம், கோழிக்‍கோடு மாவட்டங்களில் தொடரும் ரெட் அலர்ட் எச்சரிக்‍கை

Aug 14 2019 11:11AM
எழுத்தின் அளவு: அ + அ -
கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ள நிலையில், இன்று மலப்புரம், கோழிக்‍கோடு மாவட்டங்களில் சிவப்பு நிற அபாய எச்சரிக்‍கையும், இடுக்‍கி, திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்‍கு ஆரஞ்சு நிற எச்சரிக்‍கையும் விடுக்‍கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. கனமழை வெள்ளத்தினால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, ஏராளமானோர் உயிரிழந்தனர். மேலும் பலரைக் காணவில்லை. பெரும்பாலான மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மலப்புரம் மாவட்டத்தில் உள்ள Kavalappara பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்துள்ளன. மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், 15 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. காணாமல்போன 50 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய மாவட்டங்களில் மேலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இன்று மலப்புரம், கோழிக்‍கோடு மாவட்டங்களில் சிவப்பு நிற அபாய எச்சரிக்‍கையும், இடுக்‍கி, திருச்சூர், பாலக்‍காடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்‍கு ஆரஞ்சு நிற எச்சரிக்‍கையும் விடுக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00