குஜராத்: தேசியக்கொடி, ராக்கி கயிறு போன்று மனித சங்கிலி - பள்ளி மாணவர்கள் 670 பேர் சேர்ந்து உருவாக்கினர்
Aug 14 2019 2:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரக்ஷாபந்தன் தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி, ராக்கி மற்றும் தேசியக்கொடியை போன்று மனித சங்கிலியை ஏற்படுத்தி பள்ளி மாணவர்கள் அதிசயிக்க வைத்தனர்.
73வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படவுள்ளது. சகோதரத்துவத்தை போற்றும் ரக்ஷாபந்தனும் கொண்டாடப்பட உள்ளது. இரு நிகழ்ச்சிகளையும் குறிக்கும் வகையில், குஜராத்தின் சூரத் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் தேசியக் கொடியை போன்றும் ராக்கி கயிறை போன்றும் மனித சங்கிலியை ஏற்படுத்தி பார்வையாளர்களை கவர்ந்தனர். இந்த மனித சங்கிலியில் 670 மாணவ-மாணவியர் பங்கேற்றனர்.