சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பல அடுக்கு பாதுகாப்பு - ஆளில்லா விமானங்கள், சிறிய உளவு விமானங்கள், ராட்சத பலூன்கள், ரிமோட் விமானங்கள் பறக்க தடை

Aug 14 2019 12:47PM
எழுத்தின் அளவு: அ + அ -
சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், டெல்லியில், ஆளில்லா விமானங்கள், சிறிய உளவு விமானங்கள், ராட்சத பலூன்கள், ரிமோட் விமானங்கள் ஆகியவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையை சுற்றிலும் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சுதந்திர தின கொண்டாட்டங்களை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து, நாடு முழுவதும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு கமாண்டோ, ராணுவம், எஸ்பிஜி கமாண்டோ, டெல்லி போலீசார், சிஆர்பிஎப் வீரர்கள் என டெல்லி செங்கோட்டையை சுற்றிலும் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம் முழுவதும் கண்காணிப்பு மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாகன நிறுத்தும் இடங்கள் அனைத்தும் டெல்லி போலீசார் மற்றும் துணை ராணுவ படைகள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை கண்டறிய மோப்ப நாய் பிரிவு களத்தில் இறக்கப்பட்டுள்ளது. டெல்லியில், தங்கும் விடுதிகள், விமான நிலையம், மெட்ரோ ரயில் நிலையங்கள், உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00