மத்தியபிரதேசம், சத்தீஷ்கர் மாநிலங்களிலும் பருவமழையின் தீவிரத்தால் வெள்ளப்பெருக்கு - இமாச்சல் பிரதேசத்தில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்ததால் போக்குவரத்து பாதிப்பு

Aug 14 2019 12:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
சத்தீஸ்கர், ஹிமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், பொதுமக்‍களின் இயல்பு வாழ்க்‍கை பாதிக்‍கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குஜராத், மகாராஷ்டிரா, உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், பீகார், அசாம், மாநிலங்களில் கடந்த இரண்டு வாரங்களாக இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் அங்கு கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. குடியிருப்புப் பகுதிகளுக்‍குள் தண்ணீர் தேங்கியிருப்பதால் பொதுமக்‍களின் இயல்பு வாழ்க்‍கை வெகுவாக பாதிக்‍கப்பட்டுள்ளது.

ஹிமாச்சலப் பிரதேசம் Kullu மாவட்டத்தின் Larji -Sainj பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழையால் சாலையில் வெள்ளப்பெருக்‍கு ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் போக்‍குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதேபோல், சத்தீஸ்கர் மாநிலத்தின் Raigarh மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், அங்குள்ள Kelo ஆற்றில் வெள்ளப் பெருக்‍கு ஏற்பட்டு, குடியிருப்புப் பகுதிகளுக்‍குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்‍களின் இயல்பு வாழ்க்‍கை கடுமையாக பாதிக்‍கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்‍கையாக, அங்கு பள்ளிகளுக்‍கு விடுமுறை அறிவிக்‍கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் Mandsaur பகுதியில் பலத்த மழை காரணமாக, தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால், ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மிதக்‍கின்றன. வீடுகளுக்‍குள் தண்ணீர் புகுந்ததால், பொதுமக்‍கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00