காங்கிரசின் இடைக்கால தலைவராக சோனியா காந்தியின் வாழ்த்து பேனரில் மருமகன் ராபர்ட் வதேரா படம் இடம்பெற்றிருப்பதால் பெரும் சர்ச்சை

Aug 14 2019 4:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
காங்கிரசின் இடைக்கால தலைவராக திருமதி. சோனியா காந்தி தேர்ந்தெடுக்‍கப்பட்டதற்கு, வாழ்த்து தெரிவித்து வைக்‍கப்பட்டுள்ள விளம்பரத்தில், அவரது மருமகன் ராபர்ட் வதேரா படம் இடம்பெற்றிருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மக்‍களவை தேர்தலில் காங்கிரஸ் பெற்ற படுதோல்விக்கு பொறுப்பேற்று திரு. ராகுல், கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். கட்சி தலைவர் பதவிக்கு பலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், திருமதி. சோனியா, இடைக்கால தலைவராக தேர்ந்தெடுக்‍கப்பட்டார். சோனியா, இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டது விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், அவரை வாழ்த்தி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு வெளியே பேனர் வைக்கப்பட்டுள்ளது.

பேனரில் சோனியாவின் படத்திற்கு மேல் ராகுல், பிரியங்கா மற்றும் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேராவின் படங்கள் இடம்பெற்றுள்ளன. கட்சியின் எந்த பொறுப்பிலும் இல்லாத வதேராவின் படம், பேனரில் சேர்க்கப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரஸ் வாரிசு பட்டியலில் வதேராவும் இடம்பெற்றுவிட்டாரா என எதிர்க்‍கட்சிகள் கேலி செய்து வருகின்றன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3594.00 Rs. 3844.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.20 Rs. 48000.00
மும்பை Rs. 48.20 Rs. 48000.00
டெல்லி Rs. 48.20 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.20 Rs. 48000.00