மதம் குறித்து யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை - பாரதிய ஜனதாவை மறைமுகமாக சாடிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி
Aug 14 2019 4:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதம் குறித்து யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மேற்குவங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி, பாரதிய ஜனதாவை மறைமுகமாக சாடியுள்ளார்.
கொல்கத்தாவில் அருங்காட்சியகம் ஒன்றை திறந்து வைத்து பேசிய செல்வி மம்தா, மேற்கு வங்கத்தில், கடந்த ஆட்சிகளை விட, திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியில்தான் அதிகளவு துர்கா பூஜை நடைபெறுவதாக தெரிவித்தார். மதத்தை நிருபித்துவிட்டுதான் இந்து கோயிலுக்குள் நுழைய முடியுமென்றால், அதற்குபதில், தன்னுடைய உயிரை விடுவதே மேல் என்று கூறினார். தன்னை விமர்சிப்பவர்களை காட்டிலும் அதிக வேதங்கள் தனக்கு தெரியும் என்றும், மதம் என்ற பெயரில் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பா.ஜ.க.வை மறைமுகமாக விமர்சித்தார்.