சுதந்திரதின கொண்டாட்டத்தின்போது முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கான காவல்துறை அணிவகுப்பு மரியாதை ரத்து - ஒடிஷா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவிப்பு

Aug 15 2019 5:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
சுதந்திரதினம் கொண்டாடப்படும் நிலையில், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கான காவல்துறை அணிவகுப்பு மரியாதை ரத்து செய்யப்படுதாக, ஒடிஷா மாநில முதலமைச்சர் திரு. நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

ஒடிஷா மாநிலத்தில், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் திரு. நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். சுதந்திரதினம் கொண்டாடப்படும் நிலையில், நேற்று இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். ஆங்கிலேயர் ஆட்சிக் கால நடைமுறையான, காவல்துறை அணிவகுப்பை ரத்து செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். எனினும், குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர், ஆளுநர், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு இந்த மரியாதை தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். மக்களாட்சியை முழுமையாக செயல்படுத்த, காலனி ஆதிக்க அடையாளங்களை அழிக்க வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மாண்புமிகு, மேதகு போன்ற அடைமொழிகளும் இனி, சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கும், அரசியல் சட்ட அதிகாரத்தின்படி, உயர்ந்த நிலையில் உள்ளவர்களுக்கும் மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3594.00 Rs. 3844.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.20 Rs. 48000.00
மும்பை Rs. 48.20 Rs. 48000.00
டெல்லி Rs. 48.20 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.20 Rs. 48000.00