முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் : ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் மோகன் பகவத், எய்ம்ஸ் மருத்துவமனைக்‍கு நேரில் சென்று நலம் விசாரிப்பு

Aug 18 2019 5:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான திரு.அருண்ஜேட்லியின் உடல்நிலை மேலும் சோசமானதால், அவருக்‍கு உயிர்க்‍காக்‍கும் உபகரணங்கள் பொருத்தப்பட்டு சிகிச்சை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

முந்தைய பா.ஜ.க. அரசின் மூத்த அமைச்சர்களில் ஒருவராக இருந்தவர் அருண்ஜேட்லி. கடந்த ஆண்டு அவருக்‍கு மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அவர் உடல் நலம் பாதிக்‍கப்பட்டார். கடந்த 9ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்ட அவருக்‍கு, மருத்துவ நிபுணர்கள் பலரும் தொடர்ந்து பல்வேறு சிகிச்சைகளை அளித்தும், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலர் நேற்று அவரை நேரில் பார்த்து, மருத்துவர்களிடம் உடல்நலம் குறித்து விசாரித்தனர். நேற்றிரவு அருண்ஜேட்லியின் உடல்நிலை மேலும் மோசமானதால், உயிர்காக்‍கும் கருவிகள் பொருத்தப்பட்டன. 24 மணிநேரமும் அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்‍கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திரு.அருண்ஜேட்லியை ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் திரு.மோகன் பகவத் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00