ஹிமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் வெள்ளப்பெருக்‍கு - பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்‍குவரத்து பாதிப்பு

Aug 19 2019 10:10AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஹிமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் வடக்கு இமயமலை மாநிலங்களான உத்தரகண்ட் மற்றும் ​ஹிமாச்சல பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குடியிருப்புகளுக்‍குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்‍களின் இயல்பு வாழ்க்‍கை கடுமையாக பாதிக்‍கப்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தின் Uttarkashi நகரில் கனமழை பெய்து வருவதால், கங்கை நதியின் துணை நதியான Bhagirathi ஆற்றில் வெள்ளப்பெருக்‍கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், போக்‍குவரத்து முடங்கியுள்ளது.

இதேபோல் ஹிமாச்சலப் பிரதேசத்திலும் கனமழை பெய்து வருவதால், மாநிலத்தின் பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக புகழ்பெற்ற பியாஸ் நதியில் வெள்ள நீர்மட்டம் அபாய கட்டத்தை தாண்டி செல்கிறது. அங்குள்ள பண்டோ அணையில் இருந்து 1 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு இருப்பதால், மண்டி மற்றும் குலு மாவட்டங்களில் தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. MANDI, KINNAUR ஆகிய நகரில், குடியிருப்புப் பகுதிகளுக்‍குள் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல்வேறு முக்‍கிய சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்‍குவரத்து பாதிக்‍கப்பட்டுள்ளது. சாலைகளை சீர்செய்யும் பணியில் மீட்புக்‍குழுவினர் ஈடுபட்டுள்ளனர். குல்லு, சிர்மாவுர், சோலன், சம்பா போன்ற இடங்களில் மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00