ஜம்மு-காஷ்மீரில் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு - வாகனப் போக்குவரத்தும் இயல்பு நிலைக்கு திரும்பியது

Aug 19 2019 12:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜம்மு-காஷ்மீரில் விதிக்‍கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் எனக்‍கோரி, போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இன்று பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு அண்மையில் ரத்து செய்யப்பட்டது. இதனைக்‍ கண்டித்து போராட்டங்கள் நடைபெறும் என்பதால், முன்னெச்சரிக்‍கையாக ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்‍கப்பட்டன. மேலும் அங்கு ராணுவத்தினர் ஏராளமானோர் குவிக்‍கப்பட்டனர். சில இடங்களில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என வலியுறுத்தி, தலைநகர் ஸ்ரீநகரில் ஏராளமானோர் கண்டன பேரணியில் ஈடுபட்டனர். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை என பல்வேறு தரப்பினரும் முகமூடி அணிந்தபடி இதில் கலந்துகொண்டனர். தங்களுக்‍கு சுதந்திரம் வேண்டும் என அப்போது கண்டன முழக்‍கங்களை எழுப்பினர்.

இந்த நிலையில், கடந்த 15 நாட்களுக்‍குப் பிறகு, ஜம்மு-காஷ்மீரில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று மீண்டும் திறக்‍கப்பட்டன. மேலும் அரசு அலுவலகங்களும் இன்று முதல் செயல்படும் என அறிவிக்‍கப்பட்டுள்ளது. பரபரப்பான சூழலுக்‍கு மத்தியில், காஷ்மீரில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் மறுசீரமைக்‍கும் நடவடிக்‍கைகளில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாக திட்ட மேம்பாடு முதன்மை செயலாளர் திரு. கன்சால் தெரிவித்துள்ளார். இந்நிலையில், வன்முறை சம்பவங்கள் காரணமாக, ஸ்ரீநகரில் சில பகுதிகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதை அடுத்து, சவுதி அரேபியாவிற்கு ஹஜ் யாத்திரை சென்றிருந்த 300 பயணிகள் காஷ்மீருக்கு திரும்பினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00