நேதாஜி மரணம் குறித்து தெரிந்துகொள்ள மக்களுக்கு உரிமை உண்டு : மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி

Aug 19 2019 1:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸூக்‍கு, என்ன நடந்தது என்பது குறித்து தெரிந்து கொள்ளும் உரிமை மக்‍களுக்‍கு உண்டு என மேற்குவங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி, தைவானில் இருந்து விமானத்தில் பயணித்தபோது மாயமானதாக கூறப்படுகிறது. விமானம் விபத்துக்‍குள்ளானதில், அவர் உயிரிழந்திருக்‍கலாம் எனவும் சில தகவல்கள் தெரிவிக்‍கின்றன. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸூக்‍கு நடந்தது என்ன என்பது இதுவரை புரியாத புதிராகவே இருந்து வருகிறது. மத்திய அரசு அமைத்த அரசியலமைப்பு குழுக்‍கள் நடத்திய விசாரணையில் தெளிவான பதில்களும் இல்லை. இதற்கிடையே 2016-ம் ஆண்டு, நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு, நேதாஜி பற்றிய ஜப்பான் அரசின் விசாரணை அறிக்கையை வெளியிட்டது. அதில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் உயிரிழந்ததாக பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விவகாரம் குறித்து திடீரென டிவிட்டரில் பதிவிட்டுள்ள மேற்குவங்க முதலமைச்சர் செல்வி. மம்தா பானர்ஜி, மண்ணின் மைந்தனான நேதாஜிக்‍கு என்ன நடந்தது என்பது குறித்து தெரிந்து கொள்ளும் உரிமை மக்‍களுக்‍கு உண்டு என தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00